என் வாசலில் சில மின்னல்கள்

நேற்று நானும் பழகுதற்கினிய தள நண்பர் ஒருவரும் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம் .
அப்போது அறிவியல் வளர்ச்சி பற்றியும் பகிர்ந்து கொண்டிருந்தோம் .

அது தொடர்ந்து சில சிந்தனைகள் உதிக்க .. எழுதுகிறேன் .

தமிழரான நமக்கு மிக நீண்ட , ஆழமான , செரிந்த வரலாறு உண்டு. இத்தனை பழமையான வரலாறு / இலக்கியங்கள் எந்த இந்திய மொழியிலும் இல்லை என சொல்லலாம் .அதே போன்று நமது புவியியலும் மிக சிறப்பானதாக இருந்தது . ஒரு ஐரோப்பிய நாட்டின் வளங்கள் , நில நீர் நிலைகள் நம் பிரதேசத்தில் இருந்தது .

பின் ஏன் நாம் பின் தங்கினோம் ? இந்தோனேசியா வரை ஆண்ட சரித்திரம் என்ன ஆனது ? ஆப்ரிக்கா வரை பேசி கொண்டிருந்த மொழி ஏன் விரிவடைய வில்லை .

எனக்கு தோன்றியது ... நம் வரலாறை , புவியியலை பேசிக்கொண்டே அறிவியலை மறந்து விட்டோம் .இப்போதும் சோழ , சேர , பாண்டிய காலத்து நாவாய் விடுதலையும் , தேர்தல் முறையையும் , கட்டிடக் கலைகளையும் , வாணிப வீச்சுகளையும் தான் பேசுகிறோம் .
அதற்கு பிறகு என்ன செய்தோம் ?
நடுவில் பாரதி போன்றவர்கள் அறிவியலின் மகத்துவத்தை பாடினார்கள் .

இப்போது உலக அறிவியலில் இருந்து நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் . நாம் என்பது சென்னை போட் கிளப்பில் வசிக்கும் மிக பெரிய பணக்காரர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன் .
300 ஆண்டு வரலாறு இல்லாத நாடுகள் கூட முன்னிலையில் இருக்கின்றன .காரணம் ???

எது தன்னை புதுப்பித்துக் கொள்கிறதோ அதுதான் இயங்கும் . மற்றவை முடங்கும் .புதுப்பித்தலுக்கு அறிவியல் அறிவு மிக மிக மிக அவசியம் .
அறிவியல் கற்போம் . புதுப்பிப்போம் . இயங்குவோம் .
...........................................................................................................................................................................................

அடுத்து பொருள் தேடல் பற்றி சில எண்ணங்கள் ...
இன்று தகவல் தொழில் நுட்பம் என சொல்லப் படும் IT , வேலை வாய்ப்புகளை பெரிதும் அளிக்கிறது . அது அவ்வபோது கீழ் இறங்கினும் . அதன் சாதக , பாதகங்களை வேறு ஒரு இடத்தில் பேசுவோம் .

ஆனால் அந்த தொழில் நம்மை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது .நிறைய பேர் அமெரிக்காவை அடைந்த 6 மாதங்களில் ஒரு அபாட்மெண்டை , காரை பதிவு செய்து அங்கிருக்கும் வலிமையான பொருளாதாரங்களில் கலந்து , சிறப்பான , திட்டமிட்ட உலகத்தில் லயித்து விடுகிறார்கள் .
இதன் சாதக , பாதகங்களையும் வேறு ஒரு இடத்தில் பேசுவோம் .

ஆனால் நான் சொல்ல வருவது .. இந்தியா உலகத்தின் மிக பெரிய சந்தை . மிக நியாமான சந்தையும் கூட சீனாவோடு ஒப்பிடும் போது .
மும்பை , பெங்களுரு , சண்டிகர் , புனே . குர்கான் போன்ற நகரங்கள் அமெரிக்காவின் நகரங்களை விட சந்தை பொருட்களை உடனே பரிசீலித்து உபயோகிக்க தொடங்கும் மக்கள் கொண்டவை .
ஆனால் நாம் நம் சந்தையை நிலை நாட்டாமல் வேறு ஒரு சந்தையில் முயற்சிகள் செய்கிறோம் .அது எத்தனை நாள் நமக்கு சொந்தம் ?

என் அனுபவத்தில் சொல்கிறேன் . . நீங்கள் இந்திய சந்தையை , வணிகத்தை புரிந்து பணியோ , தொழிலோ செய்யுங்கள் . அமெரிக்க வருமானத்தை இங்கு ஈட்டலாம் .
இதை நீங்கள் செய்ய தவறினால் உங்கள் நாட்டின் முழு சந்தையையும் அவன் பிடித்து விடுவான் .
ஏனென்றால் அவன் சின்ன மீனை உங்களிடம் போட்டு , பெரிய மீனை எடுத்துக் கொண்டு இருக்கிறான் .

....................................................................................................................................................................................

அடுத்து நம்மை போன்ற எழுத்தாளர்களின் கடமை .
நாமும் சரி , நம்மை சார்தவர்களும் சரி .. உலகத்தின் வேகத்தில் கண்டிப்பாக பயணம் செய்ய வேண்டும் . செய்ய வைக்க வேண்டும் . நான் வேகம் என்று சொல்வது உலகத்தின் புரிதல்கள் , மாறுதல்கள் .
இங்கும் அறிவியலும் அதை சார்ந்த தகவல் ஊடகங்களும் மிக பெரிய பங்கு வகிக்கிறது .

பாரதி , ஜெயகாந்தன் , புதுமை பித்தன் , சுஜாதா .. பெண்களில் அம்பை , ராஜம் கிருஷ்ணன் போன்றவர்கள் உலகத்தின் வேகத்தில் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் முன்னாலே இருந்தனர் . நாம் அதை செய்ய முயற்சிப்போம் . இல்லை எனில் குறைந்த பட்சம் உலகத்தோடு பயணிப்போம் .

நாம் மெதுவாக இருந்தால் ...?
உலகத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை . அது எங்கோ போய் விட்டிருக்கும்.

எழுதியவர் : ராம்வசந்த் (26-Dec-14, 9:29 pm)
Tanglish : sila ennangal
பார்வை : 546

சிறந்த கட்டுரைகள்

மேலே