வறுமை - உதயா

புவியன்னை
கொடுமைகாரியாக மாறி
தன்னிடமிருந்த
நீரையெல்லாம்
கானலாக்கினால்..

கார்முகிலோ....
எங்களின்
கண்ணீரை
கண்டப்பின்னும்
மழை நீரைசிந்தா
அரக்கன் ஆனான்

வெய்யோனோ
வெட்டியானாக
எங்களை
தினம் தினம்
சுட்டெரிப்பதே
தொழிலாக
கொண்டான்

வறுமை
பசியென
காரணம் காட்டி
எம்மில்சிலரை
கவர்ந்துசென்றான்
காலன்..
அப்பாவி
பச்சில குழந்தையை
தவிர்த்தும்
தாயிடமிருந்து
பிரித்தும்..

பசி
அக்குழந்தைகளை
ஆட்கொண்டதால்
தாயின்
மாய்வறியா குழந்தை
அவள் மார்பில்
பால் தேடுது...

எம்மெய்யிலோ
எலும்பும் சதையும்
உறவாடி
ஒன்றை ஒன்று
கட்டியணைத்தால்
இதயத்திற்கு
ஒய்வு.....
காலனுக்கோ
பெரும்மகிழ்வு..

யாவற்றிக்கும்
காரணம் வறுமை
நாங்கள்
விரும்பியாயேற்றோம்???

முதலாளிகள்
கொள்ளையடித்தது
தானியங்களை
மட்டுமா????
எம்மினவர்கத்தினரின்
உயிரையும் தான்

கருணை
அவர்களிடம்
மாய்ந்துபோன
குணமென்பதால்
என்னவோ??

காலன்
எங்களுக்கு
பங்காளியானான்
எம்மில் சிலரை
அவ்வப்போது
கவர்ந்து சென்று
விருந்தளிக்கிறான்
விண்ணுலகில்.....

மனசாட்சியேயில்லாத
மானிடர்கள்
மண்ணோடு
மண்ணாகசெல்லும்
ஏழைகள்....
முடிவேயில்லாமல்
தொடரும் பாவங்கள்..

எழுதியவர் : udayakumar (27-Dec-14, 10:17 am)
பார்வை : 65

மேலே