யுகங்கள்

ஒவ்வொரு கணமும்
யுகமாய்க்
கடந்தது..
உன்னைப் பார்க்கும் வரை..
யுகங்களைக் கடந்தவன்
என்று பெருமை
கொண்டேன்..அதுவரை!
நொடிகளாய்க் கரைந்தன..
நாட்கள்..
உன்னைப் பார்த்த பின்பு!
நொடிகளும் யுகங்களும்
உன்னாலே.. உன்னாலே
மாறுது..தன்னாலே..!

எழுதியவர் : கருணா (31-Dec-14, 12:16 pm)
Tanglish : yukangal
பார்வை : 243

மேலே