2015 புத்தம் புது கதிரவனே வருக 555

வருக வருக 2015...
கதிரவனின்
பார்வை பட்டு...
வெண் பஞ்சு மேகங்கள்
பொன்மாலை சூட... த
ண்ணீரில் தத்தளிக்கும்
தாமரை மொட்டு விரிக்க...
தலை குனிந்த வஞ்சி
அவள் தலை நிமிர்வதை போல...
சூரியகாந்தி மலர்
தலை நிமிர...
பருத்தி காட்டு
காய்களெல்லாம் வெடித்து...
வெண்ணிற ஆடை
போர்த்தி நிற்க...
அந்தி சாயும் நேரத்தில்
செவ்வான மேகத்தில்...
வெட்டி சென்றது
தங்க மின்னல்...
மறைகின்ற நேரத்தில்
செவ்வண்ணம் பூசிவிட்டு மறைகிறான்...
மாலைநேர கதிரவன்...
புல்லின் மீது உறங்கும்
பனித்துளிகளை அனைத்துகொண்டு...
வண்ண மலர்களோடும்
365 நாட்களையும்...
புதிய வருடதையும்
கொண்டு வருகிறான்...
காலை நேர
கதிரவன் ""2015"".....
{நட்புக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்}