கோலங்கள்

வானப்பெண் போட்ட
கோலங்கள் தான்
எத்துணை வகை ........
எத்துணை வடிவம் ......
எத்துணை நிறம் .......
மேகப் புள்ளிகளை
அங்கங்கே இழுத்து
வளைத்து நெளித்து
போடுவாள் ........
இன்னது என்று இல்லை
பார்க்கும் வடிவம்
அவள் போட்ட கோலத்தில் .....!
யானையும் தெரியும்
பூனையும் தெரியும்
மலையும் தெரியும்
மானும் தெரியும்..............!
ஒரே வண்ணதிர்க்குள்
இத்தனை விதங்களை
எப்படித்தான் செய்தாளோ...........!
அவள் மட்டுமே
அறிவாள் அதன் ரகசியம் .........!
அவள் சிந்திவிட்ட
வண்ண சிதறல்கள் கூட
வானவில்லாய் வளைகிறது ..........!
இரவில் வைத்த புள்ளிகளை
கதிரவன் வந்து கலைத்தாலும்
காலையில் அவளின்
கன்ன சிவப்பே கோலமாய்..........!
மழை பெய்தாலும்
அழிவதில்லை அவள்
போட்ட கோலங்கள் ...............!