கதிரவனின் காதலி

சூரிய கோளத்தை
நேரிய நாணத்தோடு
வலம் வரும் பூமிப்பெண்
ஒருசுற்று முடிந்து
மறுசுற்றுக்கு கதவடைத்து
ஒப்பனையிடுகிறாள் !

நாளை அவள்
கதிரவக் காதலன்
கிழக்குணர்ந்து செம்முகம் காட்ட
வைரங்கள் பதித்திட்ட
கருநீலப்பட்டாடை
முந்தானையால்
முகம் மூடும்
பூமிப்பெண்
தான்மலர்ந்து
தாமரையாவாள் !

இன்னும் ஓர் ஆங்கிலப் புத்தாண்டு !
வாழ்த்துக்கள் அனைவருக்கும் !

எழுதியவர் : ஜி ராஜன் (31-Dec-14, 4:09 pm)
பார்வை : 121

மேலே