+இனிய புத்தாண்டே வருக வருக 2015+
![](https://eluthu.com/images/loading.gif)
புத்தாண்டு புதிதாக பிறக்கட்டுமே!
புதுப்பூக்கள் இனிதாக மலரட்டுமே!
வருத்தங்கள் தொலைதூரம் தொலையட்டுமே!
விருப்பமாய் சந்தோசம் துளிர்க்கட்டுமே!
அன்பான நட்புகள் அனுதினமும் கிடைக்க
கண்ணீரை துயரத்தை சுத்தமாய் துடைக்க
பண்பான குணமெல்லாம் பக்கபலம் இருக்க
பன்னீராய் மணம்வீசி மகிழ்ச்சியினை பெருக்க... (புத்தாண்டு...)
இன்பமே உலகெங்கும் கணக்கின்றி பெருக
துன்பமே பயந்துபோய் பனிபோல உருக
ஒவ்வொரு செயல்களிலும் உச்சங்கள் அடைய
ஒவ்வாத ஒட்டுண்ணி அச்சமோ உடைய... (புத்தாண்டு...)
தீவிர வாதங்கள் தீயான கொடுஞ்செயல்கள்
திக்கின்றி அழிய அன்புமழை பொழிய
சாதிமத பேதங்கள் சர்வமும் ஒழிய
சாதனை படைக்கவே புத்தாண்டே வருக!!! (புத்தாண்டு...)