ஒளியின் வருகை
சங்கின் நாதமும்
குழலின் ஓசையும்
கண்ணனின் வருகையை
உறுதி செய்த வேளையில்
கைகளைப் பிசைந்த கௌரவ
நரி ஊளையிட்டு
அழுதது ..
அதன் ஓலத்தில்
எழுந்த சப்தமே
அடங்குதலின் துவக்கமென
ஆன்றோரும் அறிந்தனர் ..
பரிதாபம் கொண்டனர் ..
விநாசகாலே விபரீத புத்தி
என்றெண்ணி கடந்தனர் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
