கனாக் காலங்கள்
ஏர் கலப்பை தூரிகை
ஏறுழவன் ஓவியன்
எழிலோவியம் நெற்கதிர்
எருதுகள் அவன் கைவிரல்
என ரசித்த வயல்வெளி
என் கனவில் வந்தது
ஏனென்னை கொன்றாயென்று
ஏக்கமாக கேட்டது....
பதில் சொல்ல தொடங்குமுன்
பட்டென கனவு சென்றது
பட் பட்டென போர் போடும்
பேரிரைச்சல் என்னை வென்றது