கனவுகளில் -கார்த்திகா

இனிதே நிறைவடைகிறது
வாய் வலிக்க
முழங்கிய வல்லரசு
தேசியகீதத்தில்..
வீட்டுக்கொரு பொறியாளர்
வீதிக்கொரு மருத்துவராம்
சொல்லித் தந்த பாடங்கள்
ஏட்டுச் சுரைக்காய் கறிகளோ!
கருங்கல்லாய் இருந்துகொண்டு
உடைந்த கண்ணாடிச் சில்லுகளில்
எங்கே நியாயம் தேடுவது?
கணிப்பொறியைக் காதல் செய்யும்
மென்பொருள்களென
இன்றைய இருபதுகளின்
இளைஞர் கூடாரங்கள்..
இன்னதென்று அறியுமுன்
முற்றுப்புள்ளிகளை முத்தமிடும்
முழுமையடையாத தேற்றங்களாய்
நேற்றும் இன்றும் ..
விண்வெளி இடம் மாறினாலும்
நாளை மட்டும் விலகுவதில்லை
காற்றைக் கிழித்து
கப்பல் செய்யும்
ஓராயிரம் கனவுகளிலிருந்து ..!