மழையில் உணரும் புத்துணர்ச்சி
மழையில் உணரும் புத்துணர்ச்சி
தோணுவதெல்லாம் என்னவோ?
மாறுவதெல்லாம் எவ்வளவோ?
வாழ்க்கையே வாழ வேண்டும்
என்கையை கொண்டு நானும்
தூறுவதெல்லாம் தூறலே
நினைவிலெல்லாம் மழலையே
தாய் தந்தை உணர்வு உரிமையே
நாம் கொள்ளும் இரவு தனிமையே
மண்வாசனையே வாழ்க்கை
என்வாசனையே வாழ்வு
தூறல் போடும் தருணம்
நாம் மீண்டும் இங்கு வரனும்
குமுரல் கொள்ளும் உலகிலே
கண்கள் காட்டும் பாதையே
தினமும் கடக்கும் நாட்களே
துன்பம் காக்கும் மூளையே
கலங்கினாலும் கண்களே!
கூறினாலும் சொற்களே!
இவ்வுலகு நான் வாழவே
துன்பம் கடக்கும் நாளுமே
கடந்துவிடு கனவைபோல்
உணர்ந்துவிடு உணர்வைப்போல்
முடங்காதே என்றுமே
மடங்காதே இன்றுமே
மண்வாசனையே வாழ்க்கை
என்வாசனையே வாழ்வு
உன்னை கேட்டு வாழ்ந்திடு
மண்ணை ஆண்டு காத்திடு
உண்போலே எவரும் இல்லை
நிழல்களே காக்கும் உன்னை
பிறப்பது பலர்
காப்பது உணர்வுகள்
மறக்காதே உதவியை
நம்பாதே பொய்களை
கூறுவது இவைகளே
கொல்வது மனதையே
கொல்வது அங்கு தவறே
திருடுவது இங்கு சரியே
மனதையே!
மாற்றிடு வாழ்க்கையை வாழ்ந்திடு
-மனக்கவிஞன்