சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதைப் போட்டி - 2015

சாதி ஒழி!
சாதிக்க விழி!
இட விழி, வலவிழி என
இருவிழி உள்ளபோது
இடையில் சாதி விழி (த்து)
நடைப் போட்டது எவ்வாறு?
சாதி (கள்)விழித்தால்,
நாதிக் கெட்ட நாடாய்
நலிந்துப் போகும்.

சாதியை எந்தத் தாய்
கருவாக சுமந்தாள்? - அது
உருவாக எந்தத் தாய்
உணர்வூட்டி வளர்த்தாள்?

சாதிவாரிக் கணக்கெடுப்பு
சாதிக்கப் போவதுதான் என்ன ?
சாதிக்க வேண்டியவர்கள்
சாதிக்குள்ளேவா உள்ளார்கள்?

சாதியை செனனவித்தால்
சதியல்லவா
சொக்கட்டான் ஆடும். - அதில்
மதம் அல்லவா
மனித குலத்தை அழிக்கும்.
சாதி ஒழிய,மதம் அழிய,
சமுத்துவத்தை நிலைநாட்டுத் தோழா!

கவியாக்கம் - சு.சங்கு சுப்ரமணியன்.
இக்கவிதை என்னால் புனையப்பட்டது என உறுதி அளிக்கிறேன்.
வயது - 54 - விலாசம் - நெ.100.பி/2.ஏகம்பரநாதர் சன்னதி தெரு.பெரிய காஞ்சீபுரம்.631 502.
எமது நாடு - இந்திய தாய்த் திருநாடு. அழைப்பிலக்கம் - 9444087614 மற்றும் 9791970232.

எழுதியவர் : சு.. சங்கு சுப்ரமணியன். (2-Jan-15, 7:04 pm)
பார்வை : 91

மேலே