கண்டதை எழுதும் கவிஞன் நான்

கடித்து மென்ற வெற்றிலையால்
கறுப்புப் பெண்ணின் சிவப்பு உதடுகள் போல்
கண்ணில் தெரிந்த கரும்திராட்சை கிண்ணத்தில்
கவிதை நயமாய் ஸ்ட்ரா பெரி பழங்கள்.....! - என
உண்மையைச் சொன்னேன் உவமைஎன
மென்மையைச் சொன்னேன் பெண்மையென
கண்டதை எழுதுவதால் கவிஞன் நானோ ? மனதில்
கண்டதை எழுதுபவன் கவிஞன் தானே.....!!