சாதி ஒழி மதம் அழி

சாதி மதம் தேடினேன்
நாதி அற்ற மக்களின்
தேதி கழிக்கும் அல்லலில்
மீதி நேரம் இல்லையே

பாடித் திரியும் பூக்களில்
பசும் தளிர் நெஞ்சினில்
தூசும் இன்னும் படியல
துவேசம் மனதில் நிறையல

கண்கள் தேடும் பரவசத்தில்
காதல் பிறக்கும் அவசரத்தில்
கட்டி அணைத்த மயக்கத்தில்
காண வில்லை பேதமே

கல்வி கற்ற மாந்தரிலும்
காசு மிகுந்த வீட்டினிலும்
சுழன்று வாழும் நகரிலும்
கண்ணில் பட வில்லையே

சுட்டெ ரித்த பிடி சாம்பலாய்
சூனிய த்தை தொட்ட பின்
தோன்றும் இந்த பேதமோ
சொல்லத் தெரிய வில்லையே

ஆழ் மனதில் ஊறியுள்ள
ஆதார சுருதி அறிந்து
வேரறுத்து வீழ்த்து வோம்
வேணாம் இனி வேதனை
----- முரளி

எழுதியவர் : முரளி (4-Jan-15, 7:40 am)
பார்வை : 108

மேலே