இப்படி நாம் காதலிப்போம் தை பொங்கல் கவிதை திருவிழா -2015

இதயத்தின்
ஒரு இனிமையான இம்சை
அது என் தாயுமனவளின் நினைவு .................
நித்தம் நித்தம் வந்து போகும்
கலங்கமில்லா என்னை சுமந்தவளின் மனது ..............
கண்களிலே ஒரு ஏக்கம்
என் எண்ணங்களிலே ஒரு தாக்கம்
பார்வையிலே ஒரு பரிவு
என்னை ஈன்ற தாயை கண்ட போது
என்னுள் வந்து வந்து போன தாய்மையின் உணர்வுகள் ................
அன்று உன் சேலையில் தூளி கட்டி
என்னை துயில வைத்தாய்....
இன்று என மடி தருகிறேன்
சிறிது நேரமாவது தூங்கம்மா ..........
என் தாலாட்டிலும் தாய்மை உண்டு அம்மா ...........
கால் வலிக்கும் வரை உன் விரல்
பிடித்து நடக்க வேண்டும் இரண்டு வயது குழந்தையாக .........
என்னை கருவறையில் சுமந்த "அம்மா "
நீ நடந்து வரும்
பாதையில் நான்
புதைந்து போக விரும்புகிறேன்
அப்படியாது உன் பாத சுவடுகளை
நான் சுமக்க வேண்டும் என்று ........................
நான் : விவேகா ராஜீ
உரிமம் : என்னுடையது
நாள் : 4.1.2015
வசிப்பிடம் : கோயம்புத்தூர்
தகவல் தொடர்பு : பிளட் எண்: s 1 v square apt
29-32 சின்னசாமி நகர் ,
தொண்டாமுத்தூர் ரோடு ,
ஒனபாளையம் ,
தீனம்பளையம் போஸ்ட்,
கோயம்புத்தூர் 641109.
அலைபேசி :7502054154
இந்த படைப்பு எனக்கு சொந்தம்