ஒளி வரும்

தொடுகின்ற
தூரத்தில்தான்
வானம்..!
தொடுவது எதனால்
என்பதே முக்கியம்..!
முடியாததென்று
விலகிட..
மூச்சு விடுவது கூட
சிரமமே!
முயற்சியின் முடிவிலே
முளைத்திடும்
விடிவெள்ளி..
தெரிந்திடும்
நம்பிக்கை ஒளி!

எழுதியவர் : கருணா (7-Jan-15, 5:19 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 179

மேலே