பிறப்பு

ஒரு துளியில் அரும்பாகி
என்றோ செய்த தவத்தின் பயணாய்
என் தாயின் கருவரையில் கருவாகி
அன்பை சுமக்க இரண்டாம் மாதத்தில்
இதயத்தில் இரண்டு அறைகள் பெற்று
வாழ்நாள் முழுதும் என்னை தாங்க
தண்டுவடம் தாங்கி..
மூன்றாம் மாதம் முகம் தோண்றி
அதில் இரண்டு கண்கள் முளைத்து..
நான்காம் மாதம் கொஞ்சம் நகர்ந்து..
ஐந்தாம் மாதத்தில் அங்குலம் அங்குலமாய்
வளர்ந்து..
ஆறாம் மாதம் அனைத்தும் பெற்று...
ஏழாம் மாதம் முடிகள் முளைத்து..
எட்டாம் மாதம் எட்டி உதைத்து..
ஒன்பதாம் மாதம் உண்டு பெருத்து..
பத்தாம் மாதம் பதற்றமாய் உள்ளிருந்து
சுமக்காத சுமையையும்
வலிக்காத வலியையும் தந்து
வழுக்கி விழுந்தேன் இப்பூவுலகில்...
இங்கு க.ஹேமநாதன் என்னும் பெயரும் பெற்றேன்

எழுதியவர் : க.ஹேமநாதன் (9-Jan-15, 1:09 pm)
Tanglish : pirappu
பார்வை : 79

மேலே