• சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி

உலகை காக்கும் சூரியன்
உன்னை தாங்கும் பூமி
தாகம் தீர்க்கும் மழைநீர்
செழிப்பு தரும் நதிகள்
சுவாசிக்கும் காற்று
எதுவும் ஜாதி பார்ப்பதில்லை

பார்ப்பவன் பிறந்தது
மனித ஜாதியில்

ஓ ஜாதி பார்பவர்களே!!
உங்களுக்கு ஒரு சேதி!!

உன் பசியாற்றும் உணவு
உன் மானம் காக்கும் ஆடை
உன் உயிரை காக்கும் மருந்து
நீ பயன்படுத்தும் எதுவும்
உன் ஜாதிக்காரன் படைத்ததில்லை

படைத்தவன் பிறந்தது
மனித ஜாதியில்

கடவுள் அறிந்திருந்தான்
மனிதன் பிரிந்திருபான் என!!
எனவே உடன் படைதான்
நட்பும் காதலும்!!

ஆதி மனிதர்கள்
ஆதாமும் ஏவாளும்
நம் அனைவருக்கும்
அப்பன் ஆத்தாள்
தெரியுமா உமக்கு!!

ஆதலால் உலகில்
ஒரே ஜாதி - மனித ஜாதி !
ஒரே மொழி - அன்பு மொழி !
ஒரே கடவுள் - அன்பே கடவுள் !

முகவரி:
வினோத் ஸ்ரீனிவாசன்
28/11,வேலாசாமி தெரு
அறிசிபாளையம்
சேலம் - 636009

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (14-Jan-15, 4:34 pm)
பார்வை : 689

மேலே