தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
நாம் ஒன்று திரண்டு மகிந்தவை தோற்கடித்த பொழுது எனக்கு அது ஒரு சாதாரண நிகழ்வாகவே தோன்றியது. அதன் தார்ப்பரியத்தை அவருக்கு உணர வைத்து அனைவருக்கும் முன்னே சுட்டிக்காட்டி கூறிய பொழுது மனதுக்கு சந்தோசமாக இருந்தது.
ஆனாலும், எனது வேலைத்தளத்தில் வேலை செய்யும் சிங்களவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் 'எங்கள் தோல்விக்கு நீங்கள் தான் முழுக் காரணம்' என் எம்மை பார்த்துக் கூறும் பொழுது தான் அந்த சந்தோசம், மகிழ்ச்சி எல்லாமே கர்வமாகி தலைக்கேறுவதை உணரமுடிகிறது....
இலங்கை அரசியலில் தமிழனுக்கு என்று ஒரு இடம் இல்லை. ஆனால், தமிழன் இல்லாமல் அரசியல் இல்லை.
தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா.