மக்கள் முதல்வர்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக "மக்கள் முதல்வர்" என்ற சொற்றொடர் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்களை அவரது கட்சித் தொண்டர்கள் "மக்கள் முதல்வர்" என்று தான் சொல்வார்கள்.
------------
தோழர்கள் சிலரின் கருத்தைப் படித்தபின் இதை எழுதுகிறேன். மாண்புமிகு முதல்வர் அவர்கள் கலந்து கொண்டசில நிகழ்ச்சிகளில் நான் பார்வையாளானாகவும், நிகழ்ச்சிகளோடு ஏதாவது ஒரு வகையில் சம்பந்தப்பட்டவனாகவும் இருந்திருக்கிறேன். உடன் பணியாற்றும் சிலருடன் சில நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்க அல்லது அழைப்பிதல் கொடுக்க சட்டமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்துச் சென்று சந்தித்திருக்கிறேன். நாம் வணக்கம் சொன்னதும் அவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி நம்மை அமரச் சொல்லிவிட்டுத்தான் அவர் தன் இருக்கையில் அமருவார். மக்கள் எந்தவிதச் சிரமும் இல்லாமல் அவரை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ சந்திக்கலாம். 40 ஆண்டுகளில் பல அமைச்சர்கள் முதல்வர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புதுச்சேரியைப் பொருத்தவரை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பார்வையாளர்களை/அழைப்பாளர்களை/மக்களை மிகுந்த மரியாதையுடம் நடத்துவார்கள். இதுபோல் பிற மாநிலங்களில் இருக்க வாய்ப்பில்லை .