பொங்கல்

ஒலகுடிசைக்குள்ள .......
ஒட்டடைய அடிச்சிபுட்டு
குட்டி செவுத்துல..........
பொக்கை பூரா பூசிபுட்டு

சுண்ணாம்பு........
கல்லவாங்கி
சுடு தண்ணியில ஊறவச்சி
தாழங்கட்டையை .
தகுந்தளவு வெட்டிகிட்டு
சாயம் பூசிடுவார் ...என்
தகப்பன் செவுத்துலதான்

ஏசியன் பெயிண்டவாங்கி
ஏணி வச்சி அடிச்சிபுட்டு
பெயிண்டோட பெருமைய
பேசிகிட்டு இருப்பாருங்கே .....

அரிசி மவுலத்தான் .......
அழகான புள்ளிவச்சி
பூசிய வன்னமங்கெ
பூக்கோலம் ஆனதம்மா ?
கல்லு மாவத்தான்
கலர் கலரா கலந்துவச்சி
புள்ளி இல்லாமலே..இப்போ
புதுக்கோலம் போடுதம்மா

செம்மண்ண செராக்கி......
செங்கல்ல சேத்துவச்சி
செஞ்சுவச்ச அடுப்புலதான் ...
மண்ணு பானைவச்சி
புது அரிசி போட்டுவச்சி
போங்கல்வச்சா ஏன் ஆத்தா

சிலிண்டர அடுப்பாக்கி........
சில்வர் பானவாச்சி
தை பொறந்ததுன்னு
பை அரிசி வாங்கிவந்து
பொங்குதம்மா ......
பொங்கல் இங்கே .?

கட்டவண்டி .......
காளைமாட்ட குளுப்பாட்டி
கொண்டுவந்து
மஞ்சள் குங்குமம் வச்சி
மாவிலை தோரனம்கட்டி
மாட்டு பொங்கலுன்னு
மரியாதை செஞ்சிடுவோம் !

இப்போ ?.......
ஸ்கூட்டர ஓட்டிவந்து .....
வாட்டர் சர்வீஸ் பண்ணிபுட்டு
ஹோட்டேற அடிச்சுபுட்டு
கும்மாளம் போட்டிடுவோம் !......

இரா .மாயா

எழுதியவர் : இரா .மாயா (15-Jan-15, 2:23 pm)
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே