வெற்றிடம்

நாளைய
தேவைகளிற்காக
இன்றைய
தன் விருப்பங்களை
வாழ்க்கைப்
பக்கத்தில்
வெறும் வெற்றிடங்களாக்கி
வாழ்ந்து
கொண்டிருக்கும்
பெற்றோரின்
பேரன்பிற்கு
இவ்வுலகில்
ஈடுண்டோ....?
காணி நிலம்
வேண்டாம்
கட்டுக் கட்டாய்
காசு பணம்
வேண்டாம்.....கட்டில்
மேலே
கெஞ்சிக்
கேட்கும்
தூக்கமும்
வேண்டாம்.....என்
பிள்ளை
கண்ணில்
ஒரு துளி
கண்ணீர் இல்லா
வாழ்வு
போதுமென்று
நினைக்கும்
நிகழ்கால
ஆதாரங்கள்
நம்
பெற்றோர்.....!
தன்
வலி மறைத்து
உன்
வலியை
தீர்க்கும்
கைராசி
வைத்தியனும்
பெற்றோரே...!
சிரம்சீவியாய்
நீ
என்றும்
வாழச் சொல்லி.....
தலை வாரி
தட்டிக்
கொடுத்து
அனுப்பும்
அந்த
நாட்கள்.....தொலைவில்
போனாலும்
இன்னும்
தொலையாமல்
வருடுகிறது
மனதை......!
காலங்கள்
ஓடி
மறைந்தாலும்
சில
ஞாபகங்கள்
இன்னும்
மறந்துவிட
முடியாமல்
தாய் தந்தை
நினைவுகொண்டு
இன்னும்
என்னுள்
வாழுதே......!
ஒரு கிளையில்
பூத்த
மலர்கள்.....ஒவ்வொன்றாய்
உதிர்ந்து
போனோம்.....வேர்கள்
அங்கே
அழுவது
தெரியாமல்......!
வாழ்க்கையில்
மாற்றம்
இப்படி
வெளி நாட்டில்
மாற்றிப்
பார்க்குமென்று
எண்ணாமல்
தோற்றுப்
போனேன்.....ஏமாற்றமுடன்.....!
(வெளிநாட்டு வேதனை)