காதல் சத்தியம்
இது காதல் சத்தியம்
-உன்னை நான் கரம் பிடிப்பேன் என்று
கரத்தோடு கரம் சேர்க்காமல்
- இதழோடு சேர்ப்பது காதல் சத்தியம்
இதழோடு செய்யும் சத்தியத்தில் பொய் இல்லை
- இதழோடு செயும் சத்தியம் இதயத்தில் பேசும்
இது காதல் சத்தியம்
காதல் சத்தியத்தில் பயணம் உண்டு
அது இதழ் முதல் இதயம் வரை பயணம்
முத்தம் என்று சொன்னவன் மூடன்
-முக்தி என்று சொன்னவன் முனிவன்
இது காதல் சத்தியம்
செய்து பார் இது சந்தோஷ போர்
செவ் இதழ் ரசம் இது பாலைக்கு கிடைக்கும் நீர்
இது காதல் சத்தியம்
இது உதட்டில் இருக்கும் ஊக மருந்து
- இது புரிந்தால் அது காதல் விருந்து
இது காதல் சத்தியம்
தன்நிலை மறந்து
இன்னலை துறந்து
இதழ் ரசம் கறந்து
யோகியாக காதல் சத்தியம் சிறந்தது
இது ஊடலின் முன்னுரை
ஊக்கப் பொருளுரை
வெற்றி முடியுரை
கொண்ட ஒரு கட்டுரை
இது காதல் சத்தியம்
மாது அவள் உதட்டில் இருக்கும் மது
சுவைக்க செய்வாய் காதல் சத்தியம்
இது காதல் சத்தியம்

