நிஜக் கனவு என்பது ஏழையின் வயிறு நிரம்புவது

விழி இமைக்குள் நம் நினைவுகள்
செய்து கொள்ளும் அலங்காரம்
கனவுகள்........

கோமாளித் தனமாக தோன்றி
சிரிப்பு காட்டும்.......

கோபமாக தோன்றி
பயமுறுத்தும்....

மொத்தத்தில் நம்மை நாமே
வேடிக்கை பார்க்க வைக்கும்......

முடிந்தால் மறையும்
வாழ்க்கை போல
விடிந்தால் முடியும்.........

கனவில் சாப்பாடு
பசியைப் போக்காது....!!

இது தெரியாமல்
ஏப்பம் விடுவோம்......

சுயநல வாசிகளாய் மீண்டும்
பசியோடு எழுந்து............

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Jan-15, 4:19 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 82

மேலே