மனிதனைப் போல

வயலில் பயிர்களைக்
காப்பாற்ற நிற்கும் பொம்மை நான்
மனிதனைப் போல
இருக்கிறேன் அல்லவா..?

தலை, கால்கள்,
கைகள், உடல்
தலையில் .. தொப்பி கூட..அணிந்து

நான் மனிதனைப் போல
இருக்கிறேன் அல்லவா..?

ஆனால்...
எனக்கு சாதி இல்லை
மதம் இல்லை..
ஆசைகள் இல்லை..
இயற்கை அழிப்பதில்லை
ஈனமாய் வாழ்வதில்லை
அடுத்துக் கெடுப்பதில்லை..
அதனால் நான் மனிதனைப் போல் இல்லையோ ?
..

இல்லை..இல்லை..வருந்தாதே..
உன் போல சில மனிதர்களும் இருக்கிறார்கள்
சில மனிதர்கள் போல் நீயும் இருக்கிறாய் !

எழுதியவர் : கருணா (30-Jan-15, 5:10 pm)
பார்வை : 124

மேலே