வேஷத்தால் கருகும் மலர்கள் - உதயா

ஆனந்த உலகினில்
அதிசிய மலர்களாய்
ஆயிரம் அன்புகளை
ஆசையில் காதலாக்கி
ஆகாயத்தில் சிறகடிக்கும்
பட்டாம் பூச்சிகள்
காதலர்கள் .......

அவளில் தன்னைத் தொலைத்து
தன்னில் அவனைத் தொலைத்து
இருவரும் தொலைந்து
ஒருவருக்குள் ஒருவரைத்தேடி
காதலைக் கண்டெடுத்து
கானம் படைக்கும் கவிஞ்சர்கள்
காதலர்கள் ....

கண்ணோக்கும் திசையெங்கும்
அவன் முகமே ....

மனம் காணும் கனவெல்லாம்
அவள் நினைவே .......

பாடித்திரிந்த கானங்களை
தங்களைப் படைத்தவர்கள்
அறிந்தப்பின் ....

தரையில் நீந்தும்
மீனாய் தான்
துடித்துபோகிறது
மனம் தினம் தினம்

எதிர்ப்புகள் கோடி
எச்சரிக்கைகள் கோடி
எவனுக்கோ எவளுக்கோ
மணம்முடித்து மடிந்தாலும்
கோடி போடா தயாராகும்
அவர்களின் மனது ...

துளியளவும் அவர்களை
இணைத்து வாழுங்கள்
என வாழ்த்துவதும்மில்லை
வாழ விடுவதும்மில்லை

அன்பு மலர்களாய்
திரிந்த காதலர்கள்
அநாதை பிணங்கலாகதான்
போகிறார்கள் .....

மலைகள்
தண்டவாளங்கள்
கடல்கள்
கிணறுகள்
குளம் குட்டைகள்
கயிறுகள்
விஷங்கள்
அனைத்தும்
காதலர்களின் கூடலாகிறது........

உடல் இணைந்தே
உயிர் பிரிந்தே
ஈரினம் ஓரினமாகிறது
ஆன்மாவாக

படைத்தவர்கள்
பிணங்களை வைத்துக்கொண்டு
பாசத்தினை கண்ணீராக சிந்தி
அழுகிறார்கள்

கேவலம்
உடலுக்கு கொடுத்த பாசத்தை - அவர்களின்
உள்ளத்துக்கிற்கு கொடுத்திருந்தால்
வாழ்ந்திருப்பார்கள் பல்லாண்டு .......

பாசத்தினால் வேஷம் பூண்ட
படைத்தவர்கள் வாழும் வரை
உயிரோடு உயிராக கலந்த
காதலர்கள் பிணங்கலாகதான்
மண்ணில் இணைந்து வாழமுடியும் ........

எழுதியவர் : udayakumar (31-Jan-15, 10:16 am)
பார்வை : 51

மேலே