ஆதலினால் காதல் செய்வீர் உண்மையாக

என் மகிழ்ச்சிக்குள் அவள்உணர்வுகளை
திணித்து மகிழ்ந்துகொண்டிருந்தேன்- நான்
என்ற பிடிக்குள்அவள் உணர்வுகளனைத்தும்
மெல்ல எரிந்துகொண்டிருந்தது மெழுகாய் !

என் தேவைகள் நிறைவடைந்ததும்திரும்பிப்
பார்க்கவில்லை அவள் அழுகின்றாளா ?சிரிக்கின்றாளா ?
விரக்தியில் விட்டத்தைப் பார்க்கிறாளா ?
ஏதும் நினைக்காமல்திரும்பிப் போய்க் கொண்டிருந்தேன் !


நான் என்ற போர்வைக்குள்அவள் வியர்வையில்
குளித்துக் கொண்டிருந்தாள்மூச்சு திணறியபடி.... !
பிடித்த உணவிலிருந்து உடுத்தும் உடைவரை
எனது விருப்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.. !

மதியப் பொழுதொன்றில் ஓர் குழந்தையிடம்
உனக்குப் பிடித்தது என்ன என்று கேட்டவளிடம்
திருப்பிக் கேட்டது மழலைஉனக்கென்ன பிடிக்கும் என....
எதுவும்ஒத்துப்போகவில்லைஅவள்சொன்னதில்..

என் விருப்பத்தில்கருகி விட்டிருந்தது அவள் தேவை...!
நம்பி வந்த உயிரின்உணர்வுகளைக் கொன்ற வலியெனக்கு..
ஒரு தேனீர் மாலைப் பொழுதில்என் சுயநலம்
கரைந்துகொண்டிருந்தது கண்ணீர் வழி..கசிந்துருக !

எழுதியவர் : மு.மணிகண்டன் (2-Feb-15, 11:29 am)
பார்வை : 77

மேலே