எறும்புகளின் படிப்பினை

..."" எறும்புகளின் படிப்பினை ""...

ஒற்றுமையின் கரம்கொண்டு
நட்புரவுதனை நாளும் நாடி
கற்கண்டு சொற்க்கள் கொண்டு
இனிக்கும் தமிழாலே போறிடும்
கவிதை வயலின் கவிகளே !!!

எறும்பேயுன் சுறுசுறுப்பு சூழ்சமமும்
ஒற்றுமையின் உண்மையையும்
ஒரு முறையேனும் ஓச்சமாய்
எம் செவிகேட்க உரைத்துவிடு
மனிதம் வீழாமல் காத்துவிட !!!

சேமிப்பின் மகத்துவமும்
சேமிக்கும் வழிமுறையும்
நீதிக்கதைகளாய் எங்கள் தம்
நெஞ்சில் குத்திய பச்சையாய்
மாயாது நீங்காது மனதோடு !!!

அயராது சிறிதும் அழுக்காதே
சிறு எறும்பின் வாழ்வியலே
நம் அன்றாட வாழ்க்கையின்
திரவியம் தேட நம் அன்றாட
அறுவடை செழிக்க காரணம் !!!

வரும் காலம் வருமென்று
எதிர்திசை நோக்கி எதிர்பார்த்தே
காத்திருப்பதை விட்டுவிட்டு
எறும்பைப்போல் பாடுபட்டு
துணிந்து வாழ கற்றுக்கொள் !!!

உன் சுறுசுறுப்பின் சூழ்சமமும்
ஒற்றுமையின் உண்மையையும்
ஒரு முறையேனும் ஓச்சமாய்
எம் செவிகேட்க உரைத்துவிடு
மனிதம் வீழாமல் காத்துவிட !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (2-Feb-15, 11:32 am)
பார்வை : 131

மேலே