வரலாற்று யாத்திரைகள் 3- ஒரு பக்க கதைகள் - இராஜ்குமார்

வரலாற்று யாத்திரைகள் 3- ஒரு பக்க கதைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1900 ....ல்... வெகுவான எதிர்பார்ப்போடு பலரின் பார்வை ...அதிகாரிகளின் முடிவை நோக்கி ...இறுதியாய் .." இந்தியாவின் அதிகார மொழி இந்தி " என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அதிர்ந்துபோனவை ..உருதுவையும் இணைக்க கோரிய முஸ்லீம் உள்ளங்கள் ...

அதிகாரிகளின் முடிவில் நம்பிக்கையிழந்து நகர்ந்தவர்களுக்கு ..மதகட்சிகளின் மீது நம்பிக்கை வந்தது ..அது அப்படியே வளர்ந்தது ..வளரும் விதத்தை வளமாக நினைத்து ...வங்கதேசத்தை இரண்டாக பிளந்தான் கர்சன் பிரபு ..வங்கத்தின் கிழக்குப் பிளவில் முஸ்லீமும் ...மேற்கு பிளவில் இந்துவும்...

வங்கத்தில் பிரிவினை பிறந்தது ...மொத்தத்தில் தேசத்தின் தேகம் கொதித்தது ...பலரின் உடலும் மடிந்தது ..கலவரம் காட்சியாய் போக .. காலம் கருணையை கூட கைவிட்டது ...எப்படியோ பலரின் எதிர்ப்பை ..எதிர்க்க முடியாமல் ...பிரிவினையை திரும்ப பெற்றான் கர்சன் பிரபு ..முதல் பிரிவினையின் ஒத்திகை ஓர் முடிவிற்கு வந்தது ...

இந்நிகழ்வின் முடிவில் ...உருவான முரண்பட்ட கருத்துகளால் ..காந்தியை விட்டும் ...காங்கிரசை விட்டும் பிரிந்த ஜின்னா ...முஸ்லீம் லீக் கட்சியில் இணைந்து ...பின் வளர்ந்து தலைமையாகிறார் ..

" ஜின்னா போனாலும் காந்தி தலைமையில் ....மதசார்பற்ற ஆட்சி வர வாய்ப்புள்ளது "....காங்கிரசில் சிலர் ..
" இந்து மதம் சார்ந்த அரசே ஆட்சியாக வேண்டும் "....காங்கிரசில் உள்ள இன்னும் சிலர்...

இந்த இரண்டாவதாய் பேசிய சிலர் ...ஹார்ட் லைனர்ஸ் குரூப் ...அப்படியே காங்கிரசிலிருந்து பிரிந்து .."இந்து மாகா சபை " யை நிறுவினர் ..அவர்கள் " இந்தியா இந்துக்களுக்கே உரியது .....வேறு யாருக்கும் அதில் உரிமையில்லை "....என வெளிப்படையாகவே பிரகடனம் செய்தனர் ...

முஸ்லீம்களுக்கு தனி நாடு தேவையென குரல்கொடுத்த ..இக்பாலுக்கு ..ஆதரவு அளித்தும் ..பல தீர்வினை தீ துகளாய் கொடுத்தார் ...ரஹ்மத் அலி ...அவர் ...இந்தியாவின் சில பகுதியை மட்டும் பிரித்து முஸ்லீம்களுக்கு தனி நாடு அமைக்கலாமே என்றார் ...

பலரின் கலவரத்தால் ஆங்கில அரசு ..." குரூப்பிங்க் "...திட்டத்தை தீட்டியது ..அதன்படி இந்தியா மூன்றாகும் ..முஸ்லீம்களுக்கு தனிநாடு எனவும் ...இந்துகளுக்கு தனிநாடு எனவும் ...மேலும் மத்திய மாகாணம் ஒன்றும் அமையும் ...

குரூப்பிங்க் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க கோரி ரஹ்மத் அலி...பல தலைவர்களிடம் செல்கையில் ....

"அதில் உள்ளது போல ... ஒரு போதும் நிகழ கூடாது ...அப்படி நடந்தால் ..கிட்டத்தட்ட 17 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை ..உறவுகளை விட்டு ...புதிதாய் அமைக்கும் நாட்டிற்கு செல்ல வேண்டும் ..அப்படி செல்வது மிக கடினம் ..ஏற்கனவே ஹார்ட் லைனர்ஸ் செய்யும் கலவரத்தால் பல உயிர் பறிப் போகிறது ..இட பெயர்வு நிகழ்ந்தால் ...எத்தனை உயிர் ...எத்தனை உடல் ..அத்தனையும் அடையாமின்றி அழியும் ....புறப்படும் பாதங்கள் பயத்தினை சுமந்து... வழிதெரியா பாதையில் .உயிரினை வலியோடு பிடித்து செல்லனுமா ..?அப்படியே சென்றாலும் ...உடலை பிசைந்து ..உயிரை பிடுங்க எத்தனை மிருகம் மிரட்ட நிற்கிறது மனித உருவில் ...வெள்ளையனை விரட்டாத வீரனெல்லாம் மதத்தில் மதம் பிடித்து கடவுள் ஆகிறானாம் ...கொலைகள் செய்ய ... இந்த பிரிவினை நிகழ்ந்தால் காலம் முழுக்க இரு நாடும் மதமும் பிரச்சனையையில் மூழ்கியே சாகும் ... போதும் போதும் ..வங்கத்தில் நடந்த ஒரு பிரிவினையே மூளையை பிளந்து மூச்சை நிறுத்துது ...விடுதலையே நம் நோக்கம் ...பிரிவினை அல்ல .. "
..என்று வரப் போகும் பிரச்சனையை தெளிவாக்கினார் ...ஜின்னா ....

அருகில் நின்று இதனை கேட்டதும் அதிர்ந்து .." என் சடலத்தின் மீது தான் தேசம் துண்டாக்கப்பட வேண்டும் " என்றார் காந்தி ...

காந்தியும் , ஜின்னாவும் ....இந்தியா பிரிவினை இல்லாத ஒரே அரசாய் வேண்டுமென போராடினர் ...

தேசம் முழுக்க மத நல்லிலக்கணம் பரவ ...ஒற்றுமை மட்டுமே உறுதியானது ...விடுதலையே வேட்கையானது ..விடுதலை போராட்டம் வலுவானது ...அதுவே அனைவரின் உயிரானது ..

அட்லியின் அறிக்கைபோலவே ..

1947..ஆகஸ்ட்டில் ...

மவுண்ட் பேட்டன் .... அவர்களால் ....ஜின்னா மற்றும் நேரு ...முன்னிலையில் ...இந்தியப் பேரரசுக்கு எவ்வித பிரிவினையும் இல்லாமல் ..

....சுதந்திரம் .....வழங்கப்பட்டது ....

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (4-Feb-15, 11:31 am)
பார்வை : 269

மேலே