நெஞ்சு பொறுக்குதில்லையே -மண் பயனுற வேண்டும்

முதியோர் இல்லம் - என்றுமே

மூடப்படாத கதவுகள் இங்கு எவரையும்

சிறைபிடிக்கவில்லை சிறைபடுத்தப்படுகிறார்கள்

மனிதர் பலருக்கு இவ்வில்லத்தை கோவிலாகவும்

பெற்றோறை தெய்வமாகவும் பாவிக்கிறார்கள்

மாதம் ஒரு முறை வந்து வணங்கி காணிக்கை

செலுத்துவதால் -ஆனால் அக்கடவுளை

வீட்டுக்கு அழைத்துச்செல்ல ???...

பண்டிகை நாட்களுக்கு கூட அழைத்துச்செல்ல

மனம் வரவில்லையோ

கருவறையில் சுமந்தவளோ சமயலறையில்

தோளில் சுமந்தவனோ தோட்டத்தில் ...

குருதியை பாலாய் கொடுத்தவளுக்கு உணவளிக்கவில்லை

ஆனால் பாசம் விட்டு பகட்டுக்காக

தானம் செய்கிறான் -கானல் உலகில்

பணவெறி கொண்டவனுக்கு ஈன்றவரின்

கண்ணீர் கூட வியர்வையாய் தோன்றும்

"உயிரிருக்கும் வரை காதல் " மாறி

உயிலிருக்கும் வரை மகனில்லம்

இழப்பின் முதியோர் இல்லம்

பணத்தை அடகு வைத்தாவது பாசத்தை

பெற ஏங்கும் முதியோர்கள் - இதை

காணுகையில் நெஞ்சம் பொறுக்குதில்லையே ......

எழுதியவர் : ச.ப.ம்.ஜெயஸ்ரீ (6-Feb-15, 6:50 pm)
சேர்த்தது : ச்ப்ம்ஜெயஸ்ரீ
பார்வை : 62

மேலே