ஆதலினால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

தன் பதினான்கு ஆசைகளை சொல் ,செயலால் வெளிப்படுத்தி
பெப்ரவரி பதினான்கை ஆண்டெல்லாம் நினைக்க வைப்பாள்!
உன் நலமான உடலே தன உயிரின் கோட்டை என்பாள்.
உன் புகழே தன் வாழ்வின் அர்த்தமேன்பாள்.
உன் தம்பி தங்கைக்கு அண்ணி நான் தாய் என்பாள்.
உன் அன்னை மறைவுக்கு பின் உனக்கு தான் தாய் என்பாள்
தாயுமானவன் என்றுன்னை தஞ்சம் அடைந்திடுவாள்.
உன் சுற்றம்தான் தன் சுற்றமாம் ;
உன் வாழ்விடம் அவள் அயோத்தியாம்!
இந்த ஏழுடன் இன்னும் ஏழாம்
பொறுமை, தியாகம்,குறிப்பறிந்த சேவை ;
நோயென்று வந்தால் இல்ல செவிலி சேவை;
அலைபேசியில் பின்தொடர்ந்து காக்கும் கேடயம்;
ஈட்டிய பொருள் காக்கும் வங்கி பெட்டகம்;
நீ உறங்கும்போதும் எதிர்கால திட்டமிடல்!
ஆதலினால் காதல் செய்வீர் கட்டிய மனைவியை !
காதலியே மனைவியானால் மனைவியைக் காதலி!
காதல் தோல்வி என்றாலும் மனைவியைக் காதலி
மனைவியை காதலித்தால் சமூகம் மேம்படும் !
தோல்வியையே நினைத்திருந்தால் சமூகம் சிதறிவிடும் !

எழுதியவர் : ம கைலாஸ் (8-Feb-15, 11:34 pm)
பார்வை : 121

மேலே