என் தாரமான தாய் நீயடி ………………

உன் விழி பூமியைப் பார்க்க
என் விழி உனைப் பார்க்க
வெட்கத் தோரனையில்
வீதியெங்கும் உன் அழகு பரவுதே
என் மாமன் பெண்னே

ஒளியற்றுக் கிடந்த என் கண்ணும்
ஒழுங்கற்றுக் கிடந்த என் உடலும்
மெய்ச் சிலிர்த்தது உயிரும் பெற்றதடி
உனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
என் காதல் தேவதையே

இப்பொழுது தான் என் இதயம்
இரட்டிப்பாகத் துடிக்கும் உணர்வும் கொண்டதடி
உனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
என் வாழ்வை வடிவமாக்கும்
என் தாரமான தாய் நீயடி ………………!

எழுதியவர் : ராஜா (9-Feb-15, 3:00 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 133

மேலே