கண்மூடிக்காதல்------ப்ரியா

கண்மூடிக்காதல்------ப்ரியா

என் மேல் நீ கொண்ட காதல்
பார்த்ததும் வந்த காதலா?
பார்க்க பார்க்க வந்த காதலா?
இல்லை பார்க்கும் போதெல்லாம் வந்த காதலா?
விரிவாய் சொல் என் அன்புத்தோழா.......!

எத்தனையோ பேர் காதலுரைத்தும்
என் மனம் வெறுத்தது
காரணம் என்னவோ ஆயிரம்......
ஒவ்வொன்றிற்கும் சில பல நேரங்களில்
காரணம் சொல்லமுடிவதில்லை
காரணம் தேடி அலைந்தால்
நானும் உன்னில் காதலில் மூழ்கியவளாகிவிடுவேன்......!

நான் ரசித்த ஆடவர்கள் பலர்
அதில் எனக்கு பிடித்தவர்கள் சிலர்
ரசித்தவர்களையும் பிடித்தவர்களையும்
காதலனாகவோ கணவனாகவோ
ஆக்க நினைத்தால் அதற்கு
எனக்கு பெயர் வேறு......???

ரசிப்பவர்களை கண்ணோடு
நிறுத்திவிடலாம்
பிடித்தவர்களை மனதோடு
வைத்துவிடலாம் ஆனால்
ரசித்துபிடித்தவர்களையும்
பிடித்து ரசித்தவர்களையும்
மனதிலேயே வைத்துக்கொள்ளலாம்..........!

என் கண்களை தாக்கியவன்
எவனும் என் இதயத்தை தாக்கவில்லை
என் இதயத்தை ஆளநினைக்கும்
எவனும் இன்று என் கண்முன் வரவில்லை......

அன்றோர் தினம் கண்ணில் ஊடுருவி
உயிரில் நுழைந்து;இதயத்தை தொட்ட
அவனும் இன்று என் உறவில்
ஓர் உயிராய் இல்லை........!

உன் மீது நான் காதல் கொள்ளவில்லை
வஞ்சனையில்லா என் கண்களும்
காதல் காவியம் பாடவில்லை
என் மனமும் உன்னோடு சேர்ந்து
கனாகாணவில்லை....?
உயிரான உணர்வும் உன்னோடு
காதலென்ற உறவு கொள்ளவில்லை......

உன் காதல் எந்த ரகம்...????
அளவான காதலா?
ஆழமான காதலா?
அளவுக்கதிகமான காதலா?
புரியாமல் வந்த காதலா?
இல்லை புரிந்து கொண்டு வந்த காதலா?
எதுவென யான் அறியேன்???????

உன் காதலை கொச்சைப்படுத்தவில்லை
எனக்கு உன்மேல் காதல் வரவில்லை
என்பது மட்டுமே உண்மை.......

காதல் வந்ததென்று பொய்யுரைக்கவும்
மனமில்லை......

வராத காதலை வரவழைக்கவும்
விரும்பவில்லை........!

உன் பாதையில் நீ செல்

என் பாதையில் நான் செல்கிறேன்

காதல் வந்தால் சொல்கிறேன்

உதடுகளுக்குமுன் என் கண்களே அதை உணர்த்தும்

என் மனமோ அப்போதே காதல் கவிபாடும்

என் கண்களில் அப்போது
உன்னை படம் பிடித்து
இதயத்தில் ஏற்றிவிடுவேன்........!

இப்பொழுது காதலன் என்ற உறவு
என் மனதில் துளியும் இல்லை
என்பதே உண்மை.........!

எழுதியவர் : ப்ரியா (13-Feb-15, 1:11 pm)
பார்வை : 257

மேலே