என் காதலனே
என் காதலனே....
தினம் தினம் காதலிக்கிறேன்
திகட்டாமல் உன்னை ...
எனக்காக பிறந்தவனாய்
உன்னைக்கண்ட நாள் முதல்...
இருபத்திஏழு வருடம்
எனக்காய் காத்திருந்து
ஏழு வருடம் காதலித்து
கைப்பிடித்த என்னவனே..
என் அமைதியின் மொழியை
என்னைப்போல் அறிந்தவன் நீயோ...
கேட்காமல் கடவுள் எனக்களித்த
வரமாய் வந்தவனே.. ....
உன்னை தாக்கும் துக்கம்,
தவிப்பு, கண்ணீர், சோகம்
இவையாவும் எனதாய் மாறிட வேண்டுகிறேன்
இறைவனை நாள்தோறும் ...
கண்ணுக்குள் என்னைதாங்கும் காதலனே
இப்பொழுது மட்டுமல்ல.......
எப்பொழுதும் உன் வாழ்வில்
தாயாக,தாரமாக,
மகளாக,தோழியாக,
காதலியாக
வாழ வரம் கேட்கிறேன் இறைவனிடம் ....