உணர்வே உயிரின் உறவு

இறைவனது உணர்வில்
உரைத்தது _உலகம் !
கவிஞனது உணர்வில்
உரைத்தது _கவிதை !
கலைஞனது உணர்வில்
உரைத்தது _சிலைகள் !
கண்ணனது உணர்வில்
உரைத்தது _கீதை !
உனது உணர்வில்
எதை நீ உரைத்தாய்
உணர்வில்லா உயிர்
உறவில்லா உருவம்
உணர்வை உணர்த்திவிடு
உலகை உன்வசம் இழுத்துவிடு ..................