அஜீரணம் ஜீரணம் ஆனது

எனக்கு ஒரு ஐயம்..
எப்படி சிலர் மட்டும்
தோல்விகளை
சந்திப்பதேயில்லை என்று..
விசாரித்து பார்த்தேன்..
அவர்கள் எல்லாம்
தோல்விகளை ஜீரணித்தே
வளர்ந்தவர்கள் என்று..
தெரிந்தது..
அஜீரண அவஸ்தை
அவர்களுக்கு என்றுமே..
இல்லையாம்..
வெற்றிக்கு வேறு வழியில்லை..
அது அவர்களிடம் ஒட்டிக் கொள்வதை விட!
இப்போதுதான் என்
அஜீரணம் ஜீரணம் ஆனது!
இதுவே வெற்றிதான்!

எழுதியவர் : கருணா (18-Feb-15, 5:18 pm)
பார்வை : 333

மேலே