பயம் என்பதே இல்லை

நச்சினாற்கினியன்
கச்சி ஏகம்பன்
கடம்பன்
மிச்சமுள்ள
அத்துணையும்
வழித்துணை..
பாட்டுப் பாடு..
நடையை எட்டிப்போடு..
சுள்ளியை இறக்கி விடு ..
இருட்டும் நேரம்..
பாம்பு வரலாம்..
கொஞ்ச தூரம்தான்..
நமோ..நமோ..
எப்படியோ வீடு வந்து
சேர்ந்து விட்டேன்..
எங்கே அவளைக் காணோம்..
தைரியமாகக் கத்தினேன்!
எனக்கொன்றும் பயமில்லை !