மாலை நிலாவில் நீயும் நானும்

அன்று மாலையில் நீயும் நானும் சேர்ந்து அமர்ந்து தேநீர் அருந்திடும் போது
நீ
வானத்தைப் பார்க்க நான் உன்னைப் பார்க்க
நிலவு நம்மைப் பார்த்தது
---இது புதுக் கவிதையின் சுதந்திர வரி வடிவமைப்பு . இதை ஒரு பா வரி
வடிவமைப்புக்கு கொண்டு வருவோம்

அன்று மாலையில் நானும் நீயும்
சேர்ந்து அமர்ந்து தேநீர் அருந்திடும்போது
நீவானத்தைப் பார்க்க நானுன்னைப் பார்க்க
நம்மைப் பார்த்தது நிலா .

---இது ஒரு வரிக் கட்டுப் பாட்டிற்குரிய பா வடிவம் பெற்றிருக்கிறது .
இதை இலக்கண அடியமைப்பிர்க்குரிய பா ஆக்கிட முடியுமா
முயன்று பார்ப்போம் . ஆர்வலர்கள் முயலலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-15, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 163

மேலே