நாம் மட்டுமே வாழும் காதல் -- அரவிந்த்

நட்புக்குள் துவங்கி
காதலாய் வளர்ந்து
இன்று என் வாழ்க்கையாய்...!
கிரகம் விட்டு கிரகம் சென்று
வார்த்தை தேடல் நடத்தினாலும்
சிக்கவில்லை வார்த்தை எனக்கு
உன் அன்பை வருணிக்க...!
கேட்கும் பாடலில்
யோசிக்க வைத்த வரி நீ,
நேசித்த பொழுதில்
சுவாசிக்க வைத்த இதயம் நீ...!
என் வாழ்வின் அர்த்தம் முழுதும்
உன் சிரிப்பிற்குள் வைத்து
தினம் அதை தேட வைத்தாய்...!
தனந்தனியாய் நான் இருக்கும் போதும்
தனிமை நான் அறியாமல்
எப்போதும் உடனிருந்தாய்..!
சொற்களும் தேவைப்படவில்லை
என்னை புரிந்துகொள்ள உனக்கு,
என்றும் என் மனதின்
பிம்பமாய் நீ...!
நம் சந்திப்புகள்
ஒவ்வொன்றும்
நம் காதலில்
மகிழ்ச்சியின் முகவரி...!
உன்னை பார்க்கும் நொடியில்
செயலற்று போனது புவியீர்ப்பு விசை,
உன்னை நோக்கியே
ஈர்க்கப்படுகிறேன் நான்...!
ஒவ்வொரு முறை
உன்னை சந்தித்து பிரியும் போதும்
அன்னையை பிரிந்து
முதல் நாள் பள்ளிக்கு செல்லும்
குழந்தையாய் நான்...!
உன் வலிகளில்
என்றும் மருந்தாய்,
உன் வழிகளில்
என்றும் துணையாய்
இன்றும் என்றும்
உன்னுடையவனாய் மட்டுமே
வாழ விரும்பும்
நான்...!!!