காதல் சொல்லிவிடு
பெண்ணே
நிழலாய் விழுந்தேன் உன் முன்னே ...!!!
மெய் காதல் கொண்டு வந்தேன்
பொய் மோதல் தந்து சென்றாய்
உன் விழியில் காதல்
பார்வை கண்டேன் ..!!
இதயத்தில் நீ இருப்பதினால் இதயம் துடிக்கிறது ...
கண்களில் நீ இருப்பதினால் கண்ணும் கலங்குகிறது ...
வாய் கொண்ட பூவா நீ உன் வார்த்தையில் விழுகின்றேன் ..
கண் கொண்ட தீவா நீ உன் பார்வையில் தொலைகின்றேன் ...
திசையெட்டும் பறந்த பறவை நான்
இன்று காதல் கூட்டில் சிக்கி தவிக்கிறேன் ...
நேரம் நிற்காது விரைந்திடு
கறை பாராது கடந்திடு
என்னுயிர் தாங்காது அறிந்திடு
உன் காதல் நானென்று உரைத்திடு..