இனிமை

ஆயிரம் பூக்களின்
முகப்பிலும் என்னவளின்
விம்பம் கல்வெட்டாய்!
காட்டு மூங்கில்
புல்லாங்குழலிலும்
நாரிசை வீ ணையிலும்
புன்னகைக்கிறாள்.
உன் கண்களின் ஒரு
பார்வைக்காக மனது
பசிக்கிறது. முகத்திரை
அணிந்து என்னை
பார்ப்பதன் மர்மம்
உதட்டு மச்சமா?
உன்னை ஓவியம்
வரைவதற்கு தூரிகை
வேண்டாம். என் கண்கள்
போதுமே! காதலர்கள்
நாட்குறிப்பு ஒவ்வொன்றும்
கவிதை புத்தகங்களே!
காதல் மொழியே அழகானது,
தவிப்பு அதை விட சுகமானது.
உலகில் என்றும் அழியாத
கல்வெட்டு காதல் தான்....