மழை சந்தமதில் -கார்த்திகா

சிறு சாரலின்
மழை முத்தங்கள்
கூரை நனைக்கும் தருணமதில்
குளிர் காற்றின்
இறுகலில் மெய் நுழைத்தபோது
விலக்கப்படா கைகளிரண்டில்
விண்மீன் நிரம்பி வழிந்திருந்தது!!

எழுதியவர் : கார்த்திகா AK (1-Mar-15, 12:04 am)
பார்வை : 313

மேலே