என் கண்மணி ஏன் கண்மணி
எதுவும் நடக்க வேண்டாம்
என்று வெட்டி எறிந்த
என் செடியை ஏன்
கண்டுகொண்டாய் கண்மணி ?
கண்டதை கண்டுகொள்ளாமல்
பொழைத்து போகட்டும்
என்று விட்டுருக்கலாமே கண்மணி ?
தினமும் தண்ணீர் ஊற்றி இலைகளை பசுமையாக்கி
பூக்களை பூத்து குழுங்க விட்டாயே
ஏன் கண்மணி ?
மரமாகிவிட்டேன் என்று மறுத்தபோது தண்ணீருக்காக
தவிக்கும் தருணத்தில் தான்
என்னை வேரோடு பிடுங்கி பெட்ரோல்
கொண்டு எரித்தாய் !
எரிக்கும் உன் பார்வை என்னையே எரிக்கும் என்று என் மூளைக்கு
தெரியவில்லை ஆனால் என் கண்களோ விழிகளில் இருந்து தண்ணீரை கொட்டியது!
உன் புன்னகை என்னை தண்டிக்கும்
என்று துளிக்கூட எண்ணியதில்லை
ஆனால் எண்ணவில்லை என்ற எண்ணமே என்னை கொல்கிறது!
கடவுளைக்கூட நான் நம்பியதில்லை
நம்பியதோ உன்னையும் உன் காதலை மட்டுமே!
கடவுளைக்கூட பத்தோடு
பதினொன்றாய் திட்டிவிடலாம்
நான் மிகவும் நேசிக்கும்
உன்னை என்ன செய்வேன் கண்மணி?
ஏன் கண்மணி? !