என் உயிரே

என் உயிரே..

நான் உதைத்தேன், நீ நகைத்தாய்..
நான் அழுதேன், அதற்கும் நீ நகைத்தாய்..

எனக்கு இவ்வுலகம் காட்ட, உன் உலகம் மறந்தவள் நீ !
எனக்கு பிறப்பு கொடுக்க, இறந்து பிறந்தவள் நீ !

நான் வாழ, உன்னை தியாகம் செய்தவள் நீ !!
நான் சிரிக்க, அயராது உழைதவள் நீ !!
நான் பசியாற, பட்டினி கிடந்தவள் நீ !!

என்றும், எதற்காகவும், மாறாதவள் நீ ..
ஆம், அன்று குழந்தையாய்,
என் சொந்த காலில் நின்றேன்..
சந்தோஷத்தில் ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாய் !
இன்று இளைஞனாய்,
என் சொந்த காலில் நிற்கிறேன்..
அதே சந்தோஷத்தில் ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாய் !

தருணம் மாறினாலும், வருடங்கள் ஓடினாலும்
உன் பார்வை மாறவில்லை,
என்னை இன்னும் உன்
குழந்தயாகவே பார்த்து கொண்டிருகிறாய் !!

நான் ரசித்த முதல் இசை, உன் இதயத்துடிப்பு !
நான் ரசித்த முதல் முகம் நீ !
நான் ரசித்த முதல் சிரிப்பு, உன் புன்சிரிப்பு !

காற்று புக இடத்தில் கடவுள் என்னை படைத்தும்,
உன் மூச்சு காற்றில் என்னை உயிர் வாழவைத்தாய்,
உன் இரத்தத்தை என் உணவாக்கினாய்,
உணர்வை ஊட்டினாய்..

உப்பை தின்றவனே, நன்றி காட்டுகயில்,
உன் இரத்தம் தின்றவன் நான் ..
என் காலத்துக்கும் நான் உன் காலடியில் ..

இறைவா, என் தெய்வத்தின் அவதார நாள் இன்று ..
அவளுக்கு நீண்ட ஆயுள் மட்டும் கொடு ..
நீங்காத செல்வமும், குறையாத மகிழ்ச்சியும்,
அவளை போல் அன்பு மாறாத அரவணைப்பை
கொடுக்கும் சக்தியை மட்டும் என்னிடம் கொடு ..
எனக்காய் எல்லாம் கொடுத்தவளிடம்,
நான் கொடுக்க அவைகளாவது என்னிடம் இருக்கட்டும் !!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "அம்மா" !!

என்று,
என்றென்றும், உன் அன்பு மகன்.

எழுதியவர் : ர. தினேஷ் (2-Mar-15, 9:20 pm)
சேர்த்தது : டினலீ007
Tanglish : en uyire
பார்வை : 79

மேலே