இந்த படை போதுமா!
இந்துக்களிடம்
ரிக் யசூர் சாம அதர்வண
வேதங்கள்!
முஸ்லிம்களிடம்
திருக்குர்ஆன் ஹதீஸ்
வேதங்கள்!
கிறிஸ்தவர்களிடம்
பழைய புதிய ஏற்பாட்டு
வேதங்கள்!
இப்படி
ஒவ்வொருவரிடமும்
விதவிதமான வசனங்களும்
வேதமொழிகளும்
மறைபொருள்களும்
நிறைவாயுள்ள தடித்த
வேத புத்தகங்கள்!
அவைகளை பின்பற்றாமலே
அஹா ஓஹோ என
அவரவர் தோதுக்கு
அடுத்தவர் வேதம்
சாத்தானின் வேதமென
சேற்றை இறைத்து
சண்டையிட்டு
வெட்டுயுரும் குற்றுயுருமாக
சிதறிக் கிடக்கும்
மனித உடல்கள்!
இறந்து கிடக்கும்
மனித உயிர்கள்!
எல்லா வேதமும்
எல்லோருக்கும்!
எல்லோரும்
இறைவனின் பிள்ளைகள் என்ற
இறை சிந்தனைகளை அடிக்கடி
மறந்து விடுகிறோம்!
விதாண்டா வாதம் பேசுகிறோம்!
நடவடிக்கைக்காக
"இந்த படை போதுமா
இன்னும் படை வேணுமா"
கோஷத்திற்கு மட்டும்
குறைச்சலில்லை!