கையை எடு

திரு.அகனார் அவர்களும் திரு.கவிஜி அவர்களும் இட்ட பதிவொன்றின் (எண்ணம் பகுதியில் 18610) தூண்டுதலால் என் எண்ணத்தில் எழுந்த வரிகள் இவை நட்புகளின் பார்வைக்கு :


வாயில் விரல்
வைத்து யோசிக்கிறான்..
கையை எடு என்றால்
முறைக்கிறான்..
அப்பப்பா..
இவனுக்கு என்
பெண்டாட்டியே
பரவாயில்லை..
ஆனாலும்
அவள்தான் அழகு..
குழந்தைக்கு ..
புரியவா போகிறது?
...

தவழ்ந்து ..
தவழ்ந்து..
பின்னால் நான்
தவழ்ந்து
வ்ருகின்றேனா என்று
பார்த்தபடி
குழந்தை சிரித்து முன்னேறினான்..
அந்த மனத்தை வெல்ல
எந்நாளும் முடியுமோ..
ஜெயித்து விட்டானாம்
வாயெல்லாம்
சொல்..வடிகிறது..

எழுதியவர் : கருணா (10-Mar-15, 12:31 pm)
Tanglish : kaiyai edu
பார்வை : 318

மேலே