அம்மா

என் விழி திறந்து
பார்த்த முதல் அறை
என் அன்னையின்
கருவறை......

அந்த கருவறை என்னும்
இருட்டறையில் என்னை
பத்து மாதம் சுமந்தவளே
உன் உயிர் கொடுத்து
என் உயிர் தந்தவளே......

எனக்காக
உன் தேவை குறைத்து
எனக்காக வாழ்ந்தவளே......

என் கைபிடித்து
வாழ்க்கை வாழ
கற்றுத்தந்தவளே......

உன்னை விட்டு
நான் சென்ற பிறகும்
என் நலன் கருதி
வாழ்பவளே.....

இன்றும் உன்னை
தேடுகிறேன் என்
வாழ்க்கைக்காக.......

ஆனால்
நீயோ சென்று விட்டாய்
வெகு தொலைவில்.....

அன்று தான் தெரிந்தது
என் வாழ்வின்
அரும் பெரும்
புதையலை இழந்துவிட்டேன்
என்று............

ஆனாலும்
வாழ்கிறேன் நீ என்
நிழலாய் இருப்பாய்
என்று......

ஒரு பொக்கிசமாய்
என் வாழ்வில் வந்து
புதயலாய் மாறிய
என் அன்னைக்கு
சமர்பிக்கிறேன்......

எழுதியவர் : ரா. பிரவீனா கிருஷ்ணன் (13-Mar-15, 1:47 pm)
Tanglish : amma
பார்வை : 301

மேலே