மழையே மழையே
..."" மழையே !!! மழையே !!! ""..
நீர் சுமந்த மேகங்கள்
வறண்ட பூமியில்
வந்திறங்கி சூரியனை
மறைத்தே பகல்கள்
பல நிற்காமல் நீ
அழுகின்றாய் அடைமழை
என்ற பெயரோடு அதில்
அடித்தேதான் சென்றன
எம் அன்றாட உடைமைகள்,,,
ஆற்றில் துள்ளிக்குதித்த
மீன்கள் வீட்டுக்குள்ளே
வந்தே விளையாடிட
அழையாத விருந்தினராய்
ஆடு மாடு கோழியேன
கதவோரம் காத்திருக்க
நாங்களே காய்ந்திருக்கும்
வயிறோடு வந்தோருக்கு
எதைனாம் கொடுத்திட ,,,
மழையே உன்னுடைய
வருகைக்காய் தவித்தும்
நாமே மழையேயுன்
வருகையில் இன்று
தத்தளித்தும் நாமே
வேண்டும் நீயென்று
தவித்திருக்கும் நிலங்கள்
பலவுண்டு அங்கு சென்று
மே(வே|)கமே நீ பொழி,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..