முயக்கம்

ஓய்வெடுத்த கணம் என்று,
ஏதாவது உண்டா சமீபத்தில்,
என சட்டென ஒரு ஆராய்ச்சி,
தொடர்பில்லாத இடர்பாடுகள் கடந்து,
தொலைந்தேன்,
எனது உழைப்பின் உந்துதலில்,
தயக்கமில்லாத விழிப்புத்தடவலில்,
மங்கிய வெளிச்சத்தில்,
ரொம்பி வழிந்தது கடமைகள்,
வெளிச்சம் பார்க்க வெளியே வந்தால்,
கூசவைத்தது நிலவின் கீற்றும்,
அலுவல் என்பதை பளுவாய் நினையாது,
முறுவல் காட்டியே சாதித்தேன் பணிகளில்,
எண்ணங்கள் வண்ணமிழந்தாலும்,
கன்னத்தின் கதகததப்பு செயல் செயலென்றது,
மின்னிமறைந்த மனிதர்கள்,
உணரவேண்டிய அவசியமில்லையே,
உழைப்பின் உச்சாடனத்தை,
கரம்பற்றி கடமையாற்ற,
இணைந்து வந்த உள்ளங்கள் பல,
உழைக்கத்தயாராய் உறுதிமிகு துணையாய்,
சாதிக்கிறோமோ இல்லையோ?
நேசிக்கிறோம் நாங்கள் உழைக்கிற நிமிடங்களை,
பலன் உண்டோ இல்லையோ,
வளம் உண்டு உயிருக்குள்,
ஊதியங்கள் மூன்றாம் பட்சம்,
வேள்வியது இரண்டாம் பட்சம்,
பொங்கியெழுந்து பொசுக்கி முடித்து,
வெந்தெழுந்து செய்கிற முயற்சியே முதற்பட்சம்..........

எழுதியவர் : பாரத்கண்ணன் (18-Mar-15, 10:24 pm)
பார்வை : 53

மேலே