உள்ளீடு
வெள்ளையடிக்கப்பட்ட எண்ணங்களின் உள்ளே,
உறைந்தே கிடக்கிறது,
தவறுகளென்னும் சிராய்ப்புகள்,
குற்றங்களென்னும் தேய்மானங்கள்,
பாவங்களென்னும் பொத்தல்கள்,
துரோகங்கலென்ளென்னும் கறைகள்,
இங்கே !!
வெள்ளையென்னும் திருந்தல் சுண்ணாம்பு !
சுயசமாதானம் எனும் பயங்கரம் !!